Posted by: vijayashankar on: February 5, 2010
***
For the first 'X' can also come.
Typical Politicians of India. They should travel in divided highways and bullet + mine proof cars. They should not trouble the poor people. I have seen in Washington DC, Bill Clinton's convoy pass in the next lane ( total 4 lanes ) in the Washington DC Beltway. Only inside city, they announce the closing of roads, well in advance, if there is a major function like inauguration, etc.
***
Vesti – can trip you, and you cant swim. So Vadivelu might have understood!
***
One way rule is illogical – typical of Tiruppur! I am from there…. Never anywhere I have seen it. Just a guess in your style, if the length of the road 'one-way' is one kilometer, and it takes 10 minutes to cross to the other end, wont they need to stop traffic at the wrong side at 5.50 AM itself? ( 11 Pm to 6 Am )
–
Regards
Vijayashankar
Posted by: vijayashankar on: February 5, 2010
If a bat and a ball costs Rs 110 put together and the bat is Rs 100 more than the ball, what is the cost of the ball.
Well if you tell is is Rs 10 as cost for the ball, that is not the right answer.
Most of us make this kind of strategy mistake.
Simple but repeated …. but with life, a lot can be achieved with small corrections.
***
the right answer would be:
bat cost Rs 105
ball cost Rs 5
–
Regards
Vijayashankar
Posted by: vijayashankar on: February 3, 2010
சொக்கன் எழுதிய இந்த பதிவை படித்தேன்…
//அடப்பாவிகளா, எனக்கு எதுக்குப் பேஜர்? அதுக்குப் பதிலா அஞ்சோ, பத்தோ கொடுத்தா டீ குடிக்க ஆவும்.//
முழு நேர எழுத்தாளர் இப்படி தான் சிந்திப்பாங்களோ?
எனக்கு எழுத தூண்டியது, சுஜாதா சிறுகதைக்கு “ஷ்… ஆ.. ” (கல்கி என நினைவு) நான் எழுதிய பாராட்டு கடிதம், திருப்பூர் விஜயஷங்கர் என்ற பெயரில் வெளி வந்தது. ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த சமயம்… 1981 … நண்பன் எல்.ஐ.சி சதீஸ் எழுத சொல்லி, நான் ஒரு ஐந்து பைசா கார்டில் அனுப்ப… பிறகு கையெழுத்து பிரதி “தூறல்” என்ற பெயரில் நடத்தி ( எழுதியவர் ஸ்ப்ரிங் நிட்டிங் கே. ஸ்ரீ சரவணன் ) சில இதழ்களில் நின்றது. பிறகு “சங்கமம்” என்ற பெயரில் ஒரே ஒரு இதழ் 1985 இல் வந்தது.
அந்த சமயம் என் முழு கவனம் தமிழ்,ஆங்கில டிபேட் மட்டும் தான். பல பரிசுகள் காலேஜ் வரை பெற்றேன். ( குத்தி காட்டுதல்… அதில் பழகியது )
1987 இல் ஜி.சி.டி யில் நடந்த தமிழ் மன்ற போட்டியில் கதை ( தலைப்பு மட்டும் கொடுத்தார்கள் – மருதானிக்கனவுகள் ), மற்றும் கவிதை போட்டியில் – ஏதோ ஒருபரிசு.
அதோடு சரி… பிறகு 2006 முதல் எழுத்துப்பணி ப்ளாகில்.
***
முக்கியமாக ஆறாம் வகுப்பு முதல், செயின்ட் ஜோசப்ஸ் திருப்பூர் பள்ளியில், தமிழ் நாடகங்கள் போட்ட அனுபவம் – நண்பர் சுந்தரவடிவேலு உடன் ( பணத்தின் லீலைகள் இரண்டு முறை மேடை ஏறியது ) – மறக்க முடியாதது. தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் நாடகங்கள் எழுதி இயக்கி நடித்தேன்!
***
அதே எல்.ஐ.சி சதீஸ் ( அவுங்க அப்பா பனி புரிந்த நிறுவனம்! ) தான் ஜோதிடம், கைரேகை குறித்து படிக்க தூண்டியவன் (ர்). திருப்பூர் லைப்ரரியில் பழியாக கிடந்த சமயங்கள் அதிகம்.
***
இப்போது திருப்பூர் பரிசல் கிருஷ்ணா கதை தொகுப்பு ஒன்று வருகிறது. சங்கர் நாராயணனும் ( கேபிள் சங்கர் ) ஒரு சிறுகதை தொகுப்பு போடுகிறார்.
வாழ்த்துக்கள்!
Posted by: vijayashankar on: January 27, 2010
வேலை பற்றி ஒரு பதிவு படித்தேன். சிங்கக்குட்டி என்பவர் எழுதியது. நிஜப்பெயர் தெரியலே…. நண்பர் ராஜு ட்விட்டர் மூலம் சொன்னார்!
நல்ல பதிவு!
என்னை பற்றி நானே இன்னொருவர் எழுத படித்த மாதிரி இருந்தது. ராஜு சொன்ன மாதிரி ஒருவர் மேனேஜர் லெவலுக்கு போய்விட்டால் – இரண்டு வருடம் அங்கேயே இருக்க ட்ரை பண்ண வேண்டும். சில சமயம் ( பல? ) ஒரு வருடத்திற்கு மேல், பிசினஸ்ஸை பொருத்து வைத்திருப்பார்கள்… காசு அதிகம் என்பதால் பெரிய சம்பளத்து ஆட்களை நீக்குவது தான் சீனியர்களின் ( அதிகம் காலம் ஒரு கம்பெனியில் இருந்தவர்கள்? ) மரபு. நேரம் வரும் பொது வேலை தானாக வரும். நானும் அதை தான் நம்புகிறேன்.
என்னை மாதிரி வேலை இல்லா சமயத்தில் சொந்தமாக எதாவது செய்ய ட்ரை பண்ணலாம். ( காசு குறைவாக இட்டு ) ஐடிலாக இருக்காமல் இருக்க உதவும்.
நாராயணமூர்த்தி சொன்ன மாதிரி – நம் வேலையை தான் விரும்ப வேண்டும். ஒரு கம்பெனியை விரும்பி, அதன் நிதி நிலைமை ( சத்யம் ஞாபகம் இருக்கும்! ) சரியில்லாவிட்டால்… கதி அதோ கதி தான்.
***
நண்பர் ஜவர்லால் சிக்ஸ் சிக்மா பற்றி அழகாக எழுதுகிறார். பொங்கல் சமயத்தில் ஹோசூரில் அவரை குடும்பம் சகிதம் சந்தித்தேன்….
பெங்களூரில் அவர் ஒரு சிக்ஸ் சிக்மா கோர்ஸ் ஏற்பாடு செய்வார் என நம்புவோம்!
Posted by: vijayashankar on: January 26, 2010
Posted by: vijayashankar on: January 20, 2010
அமெரிக்கா வாழ் இந்தியர்கள் பற்றி நிறைய சொல்லலாம்.
நானும் அங்கிருந்தவன் தான். மனதார சொல்லுகிறேன் என்னால் முடிந்த வரை நண்பர்களுக்கு உதவியுள்ளேன். ஒரு சமயம் நண்பர் ஒருவருக்கு ( சிறிது காலம் பழகி இருந்தாலும்) ஐந்தாயிரம் டாலர்கள் வட்டியிலா கடன் கொடுத்து ஒரு வருடம் கழித்து திருப்பி வாங்கியுள்ளேன்! எதற்கு – அவர்கள் ஊரில் வீடு செட்டில்மென்ட் இருப்பதால், இவர் செல்ல முடியவில்லை… பணம் தான் சென்றது. வீடு மிஞ்சியது!
அமெரிக்கா வாழ் இந்தியர்கள் பற்றி தெனாவெட்டுகள் என்று எதானால் சொல்லுகிறேன்? தான் உண்டு தான் வேலை உண்டு என்று இருப்பவர்கள், மற்றவர்களுக்கு உதவி புரியாமல் அவரவர் வாழ்க்கையை பார்த்துக்கொண்டு இருப்பார்கள். தவறு ஒன்றும் இல்லை!
என் அண்ணனும் என்னை இன்றும் தெனாவெட்டாக இருப்பவன் என்று தான் சொல்லுகிறார். பழகிவிட்டது போல. அட்டிடூட் ப்ராப்ளம்? இது அமெரிக்காவில் இருந்து பிடித்து வரப்பட்ட நோய் போல?
ஒரு முறை நான் ரெடிங் என்ற ஊரில் இருந்த ஒரு சமயம், நிறைய ஆணி ( பக்ஸ் ) பிடுங்க வேண்டி இருந்த சமயத்தில், என் உறவினர், பதினாறு மையில்கள் கிழே தள்ளி போகும் ஹைவே பாதையில் ( ரூட் 76 ) இருந்து வரும் போது, வந்து பார்க்கிறேன் என்றார்… என் நிலைமையை சொல்லி, வேண்டாம் இப்போது, மற்றுமொரு முறை பார்க்கலாம் என்று சொல்லிவிட்டேன். கொடுக்கிற காசிற்கு வேலை செய்யும் எண்ணம் தான்! அவரும் புரிந்துக்கொண்டார். டென்சன்!
மற்றொரு சமயம், இரண்டு காரில் பத்து நண்பர்கள் வந்து ஒரு சிங்கிள் பெட்ரூமில் கொட்டம் அடித்தது தனி கதை. எல்லா வேலையும், உணவு உட்பட என்னை எதிர்பார்த்தார்கள்!
ஆனால் என் சொந்தங்கள் ( மிக பெரிய கோடீஸ்வரர்கள் ) அங்கு வந்த சமயம்… ஒரு மாதம் டூர், சொந்தங்கள் இருந்த இடத்தில மட்டும் பைல் ஆன், சில நாட்கள் இருந்தாலும் அவர்களே ஊர் சுற்றிக்கொண்டார்கள். ஹாலில் தான் படுத்தார்கள். சமையலும் அவர்களே பார்த்துக்கொண்டனர். நான் தான் ஒரு வீகென்ட் விடாப்பிடியாக நியூ யார்க், நியூ ஜெர்சியில் சில இடங்களுக்கு அழைத்துச்சென்றேன். இன்றும் அதை நினைவு கூர்ந்து சொல்லுகிறார்கள்… ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும்!
சில சமயம் புது கன்சல்ட்டேன்ட்ஸ் வரும் போது, என்னோடு ( தனியாக இருந்த சமயம் ) தங்க வைத்து ( இலவசமாக தான்! ) அவர்களை வீடு பிடிக்க உதவி செய்து ( ரெபரல் fee இல்லாமல் ) இந்தியன் ஸ்டோர்ஸ் இருக்கும் இடம் அழைத்துச்சென்று வருவேன். காசு கடன் கொடுப்பதும் உண்டு! ( கையில் டாலராக இருக்கும் – எடுத்து செலவு செய்யமாட்டார்கள் – இந்தியாவுக்கு அனுப்பனும் அல்லவா? எவனோ செலவு செய்யட்டும்! ).
இன்று காலை நண்பர் ராஜுவிடம் பேசிக்கொண்டு இருந்தேன், அவர் இருக்கும் பிரின்ஸ்டன் பகுதியில், ஒரு இந்தியரும் உதவுவதில்லையாம். அந்த மனப்பான்மையே இல்லையாம்… அவர் மனைவி வேலை செய்யும் இடத்திற்கு அழைத்து செல்லும் கார்பூல் அமெரிக்கன் ( வெள்ளைக்காரர் பெண் ) மாதம் இருநூறு டாலர் வாங்கினாலும் – நல்ல உதவி செய்கிறாராம்…..
துபாயில், சவுதி அரேபியாவில் இருந்த என் மாமா, எங்கள் ஊரில் டிப்ளமோ மட்டும் படித்த ஒருவருக்கு தனது இன்ப்ளுஎன்ஸ் மூலம் வேலை பெற்று தந்தார். ஒரு நாள் வேறு இடத்தில சம்பளம் அதிகம் கிடைத்தால் – நம்பிக்கை வைத்து அழைத்து சென்றவரிடம் சொல்லாமல் சென்றுவிட்டாராம். ( நேரடியாக முதலாளியிடம் பாஸ்போர்டை வாங்கிக்கொண்டு ) மிகவும் வருத்தப்பட்டார்!
அதைப்போலவே என் நண்பன் ஒருவன் இருக்கிறான். திடீரென்று என் வேலை நிலைமை தெரிந்துக்கொண்டு ( ஒரு கோடி ருபாய் சொந்த பணத்தை நான் இன்வெஸ்ட் செய்வது தெரியாமல் … கிண்டல்? ) அமெரிக்காவில் மிகவும் நல்ல வேலை இருப்பதாகவும், உண்டனே விசா செய்து வர முடியுமா என்று கேட்டு மெயில் அனுப்புவான். அப்படியே பாரக் ஒபாமா எனக்கு விசா அடித்து உதைத்து அனுப்புகிற மாதிரி நினைப்பு தான்! அவனுக்கு தெரியாது இந்தியாவிலும் நான் மிக சந்தோசமாக, சவுரியங்களுடன் இருப்பது. அமெரிக்காவை விட்டு வெளியேறி விட்டேன் என்பதால், குறைந்து ஒன்று போய் விடவில்லை. அவன் அம்மா இன்றும் என் அம்மாவிடம், உங்க பையனுக்கு அடுத்த ரேன்க் தான் என் பையன் எடுப்பான் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்! நான் முதல் ரேங்கில் அவன் இருபதில், பட் எனக்கு அடுத்த ரேன்க் தானே!
சில காலம் முன் ஒருவர் என்னிடம் உதவி கேட்டார். அவர் வேலைக்கும் செல்லும் ஊரில் தமிழ் பேசும் நண்பர்கள் கிடைத்தால் சந்தோசம் என்றார். அவருக்கு தெரியாது நம் அருமை தமிழர்களை பற்றி ( அவர்கள் குடும்பம் மற்றும் வேலை என்றே இருப்பார்கள். இல்லாவிட்டால் அங்கு மிக பிரபல எழுத்தாளர்கள் வந்தால் தான் கவனிப்பார்கள்! ) மேலும் இவர்கள் தான் அமெரிக்கா நிலைமை பற்றி கருது கூறி தான் சொந்தங்கள் தவிர யாரும் அமெரிக்காவிற்கு உள் கால் ஊன்ற வழி செய்யமாட்டார்கள்…..
சிலரை இணையத்தில் கேட்ட போது, மழுப்பி விட்டார்கள்…. ட்விட்டரிலும், ப்ளாகிலும் கதை அடிக்க தானா நண்பர்கள்?
எதற்கும் இருக்கட்டும் என்று என்னோடு பனி புரிந்த கொரிய நண்பர் ஒருவரின் நம்பரை கொடுத்தேன். அவர் மிகவும் நன்றாக உதவி செய்தாராம். ஒரு முறை அதே ஆபிசில் வேலை செய்த நண்பருக்கு நண்பர் ( ஒரே கல்லூரியில் படித்தவர் வேறு ) பார்த்த போது…. முகம் திருப்பிக்கொண்டு சென்றாராம்! என்ன பயமோ! கொடிமையடா சாமி!
***
நான் 1994 இல் அமெரிக்கா வேலை விசயமாக சென்றேன். 1990 இல் மூன்று கல்லூரிகளில் எமெஸ் கிடைத்தும், ஸ்காலர்ஷிப் இல்லாததால் செல்லவில்லை. பிறகு 1995 இல் லா சாலே பார்ட் டைம் எம்பியே படித்த கதை தனி! ( முடிக்க டைம் இல்லை , முடிக்கணும்! )
1998 கல்யாணம் செய்த பிறகு, மனைவியுடன் கூட ஒரு வருடம் அங்கிருந்துவிட்டு, க்ரீன் கார்ட் கடைசி ஸ்டேஜில் இருக்கும் போது, 1999 இல் குடும்ப விசயத்திற்காக இந்தியா திரும்பினேன். 2001 வரை 485 பைல் செய்ய டைம் இருந்தது!
இரண்டாம் முறையாக 2004 இல் குடும்பத்தோடு அமெரிக்கா சென்று செட்டில் ஆகலாம் என்று தான் இருந்தேன். ஆனால் மனைவி குழந்தைகளுக்கு பிடிக்கவில்லை. ஒரு வருடத்தில் ஜி சி வாங்கியிருக்கலாம் ( எல் 1 ஏ – மேனேஜர் ) பட் மெக்சிகன்ஸ் அதிகம் இருந்த பகுதியால் வந்த வினையா தெரியவில்லை. என் கம்பெனி கொடுத்த காசு குறைவு, அதனால், தான் ஆபிஸ் அருகில் அந்த ஏரியா வீட்டில் வாடகை குறைவாக இருக்கும் நிலைமை.
மீண்டும் ஒரு முறை அமெரிக்காவில் சென்று சிறிது காலம் வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். பார்ப்போம் எப்படி நிலைமை இருக்கிறது என்று. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். தெனாவெட்டு வேண்டாமே!
Posted by: vijayashankar on: January 17, 2010
கெளரவதிர்க்காக வெளிநாடுகளிலேயே வேலை செய்யும் டாக்டர்கள் அதிகம். நான் சந்தித்துள்ளேன். டிஞ்சி மருத்துவமனைகளில் ( யு. எஸ். ஏ. சாதா ப்ரொவைடர்கள் )… நான்கு வருடத்திற்கு குடும்பத்தோடு ஒரு முறை இந்தியா. பணம், பவிசு காட்டல்.. என போகும். முடிந்தால் கோவை (?) கொச்சின் (?) ஹாஸ்பிடல் போன்ற இடங்களில் மூன்று மாதங்கள் ( சேவை ) என்ற பெயரில் வந்து போகும் செலவுகொடுக்கப்படும்.
அப்புறம், முடிந்தவரை டாக்டர் என்ற மருத்துவ தொழில் செய்கிற மாதிரியே ( டிகிரி மற்றும் பெறாமல் ) வரனை தேடி பிடித்துகொள்வார்கள்.
பிலேதேல்பியாவில் கண்ணன் என்ற ஒருவர் ரெசிடென்சி செய்து வந்தார். நண்பர் பெரோசிர்க்கு தெரிந்தவர். கோவைக்காரர். வேலையிடத்தில் அங்கு வாழும் கருப்பர்கள் தொல்லையால், மேற்படிப்பு முடிந்தவுடன், கனடா சென்றுவிட்டார். அதுவும் சிலசமயம் நடக்கும்.
பதிவுபோதை என்ற வலைப்பூ எழுதும் நண்பர் ரமேஷ் டெண்டுல்கர் அக்கா, மச்சான் வாஷிங்க்டன் டி.சி. அனுபவங்கள் எழுதியிருக்கிறார்.
பேச்சு திறமை இருந்தால், தீபக் சோப்ரா போன்றவர்கள், அல்டேர்நெடிவ் மெடிசின் படம் காட்டி வாழ்வார்கள்.
யாரையும் இங்கு நான் குறை கூறவில்லை. நடைமுறை.
***
சம்பத்தப்பட்ட பதிவு – டாக்டர் விஜயின் – தாய் நாடு திரும்பும் மருத்துவ நண்பர்கள் – பாகம் 1
Posted by: vijayashankar on: January 16, 2010
Here are some pictures… My wife and daughter won prizes in Senior and Junior Rangoli competitions. And son won in kite display.
Posted by: vijayashankar on: January 15, 2010
Hi All
Here is a site that gives info on watching the Solar Eclipse Online.
In India is tocuhes and croos from 9.38 AM to 3.38 PM ( Indian Standard Time )

–
Regards
Vijayashankar
Posted by: vijayashankar on: January 13, 2010
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

–
இவன்
விஜயஷங்கர் மற்றும் குடும்பத்தினர்
Recent Comments